வாணம் பார்த்த பூமி... எங்கள் சாமி...!
கார் மேகம்... எங்கள் கடவுள்....!
யார் கண்டது இனி எங்கள் வாழ்வு தாழப்போவது என்று...!
ஆண்டவன் எங்களை கைவிட்டான்... மழையின்றி...
ஆண்டவர்களும் கைகழுவி விட்டனர்... மனமின்றி...
மண்ணை நம்பி பிறந்தவர்கள் நாங்கள்...
மண்ணை நம்பி வாழ்ந்தவர்கள் நாங்கள்...
இனி எங்கே போவது...?
மண்ணுக்கா...விண்ணுக்கா...?
விடை தெரியாது எங்களுக்கே...
கடைசி வினாடிக்கு காத்திருக்கிறோம்...!
No comments:
Post a Comment