20170915

எல்லா மதங்களிலும் சாத்தான் இருக்கிறான்
பேயும், பிசாசுமாக...!
சாதனை படைத்த கடவுளுக்கும்
சாத்தானை படைத்த கடவுளுக்கும்
என்ன ஒற்றுமை...?
என்ன வேற்றுமை....?
அரசியலை  வைத்து ஆண்டவனும் பிழைக்கிறானோ ...?
தமிழா...!


வெட்டிப் பாடல்களுக்கு 
வேட்டி மடித்து ஆடும் தமிழா...
உலகெங்கும்உன்னை 
ஓட ஓட விரட்டியும் திருந்தவில்லை... 
மனம் வருந்தவில்லை...!

சேர சோழ பாண்டியனின் வீரம் எங்கே...?
பாரி, காரி, ஓரியின் ஈரம் எங்கே..? 
மானங்கெட்டு கூத்தடிப்பது ஞாயமா...?
மழைதுளிக்கே ஓடி மறைவது தீரமா...?

எதை பற்றியும் கவலையுறா  திருப்பது
உன் சாவுக்கே  சங்கு ஊதும் ..!
நீ யாரையும் வீழ்த்த வேண்டாம்...
உன்னையே காத்துகொள்...அது போதும்...!








20170718


யார்... யாரோ...?
 
யாரும் யாருக்கும் வேண்டாம்... எனினும் 
யாவருக்கும் யாவையும் வேண்டும்...!

இல்லாதல் சொல்லாமல் வேண்டும்... இங்கே 
சொல்லாமல் எல்லாமும் வேண்டும்...!

நட்பு... காதல்... நல்லவையாய் வேண்டும்...ஆனால்
நான் நானாக வேண்டும்...
நீயோ எனக்காக வேண்டும்...!

என் வீட்டில் அதிர்ஷ்டம் கொட்ட
உன் கூரை பிய்க்க வேண்டும்...!

உனக்கு சமைத்த மணக்கும் சாப்பாடு...
நீ வருமுன் ருசிக்க வேண்டும்...!

எனக்கான பூக்கள் கொய்ய
உன் தோட்டம் பூக்க வேண்டும்...!

இன்னும் வேண்டும்...வேண்டும்... ஆனால்
யாரும் யாருக்கும் வேண்டாம்... எனினும்
யாவருக்கும் யாவையும் வேண்டும்...!