20220804

கவிதை



மழலை இதழில்
கவிதை மழை...!

வானில் விரியும் சிறகுகள்!


நிலவின் அழகில்

உலவித் தழுவி

நிலம் விழும் கணையும்

வான்விரி சிறகின்

மாதிரிச் சிறகே...!


கலையும் சிலையும்

பாட்டும் பரதமும்

மனிதக் களிப்பில்

மகத்தாய் விரிந்தவை!

மனத்தால் நிறைந்தவை!


புவியியல் புள்ளியியல் இன்னும் பிற அறிவியல்

மனிதக் கனவில்

மனவான் பறந்த

மாயச் சிறகுகள்...!


இதிகாச இலக்கியமும்

அதிமேதாவிகளின்

கற்பனை வானில் 

விற்பனைக்கின்றி 

விரிந்தவை தானே...!


அண்ட சராசரமோ

அகண்ட பாரதமோ

வாழ்வென்பதும்

வளமென்பதும்

விரிக்கும் சிறகின்

வீரியம் பொறுத்தே...! எனவே...

சீரிய சிறகுகள்

சிரித்தே விரிப்போம்...

பால்வெளி சிவக்கப்

பறப்போம்... சிறப்போம்...!!



இரவின் நிழல்!


நிர்மாண வாழ்வு

உன்னால்

நிர்வாணமாகும்!

நிர்வாண வாழ்வு

உன்னால்

நிர்மாணமாகும்!!



மழைக்காலம்










தொடர் தூறல்

தூரத்து மின்னல்

வானம் இசைக்கும்

கான மழை!!!


நெடுநல்வாடய்

கனவில் மலர்ந்து

நனவில் நிகழ்ந்து

மனதில் நிறுத்தும்

இம் மழைக்காலம்!!!

புன்னகை

 இறகுகள் இணைய

பறவையின் சிறகாகும்!


உன் நினைவுகள்

பிணைய என்

மனம்  இரவாகும்!!

இது ஒரு நிலக்காலம்



மின்னல் கீற்று தான்!
எனினும் எனக்கு
தென்றல் காற்று ❤️