20110630

கொல்லி மலைத்தேன்

சொல்லியது இதயம் அவள்
சொக்கத் தங்கம் என்று...!
துள்ளியது மனது... அவள் 
அல்லி
மலரினும் அழகு என்று...!
கொன்றது அவள் பிரிவு... போனேன்
கொல்லி மலைச் சரிவு...!
சா என்றது மனது...
வா என்றது அவள் நினைவு...!

கொட்டியது மழைத் தூறல்... மீண்டும்
எட்டியது அவள் நினைவுச்  சாரல்...!

ஏன் எனத்  தெரியவில்லை... அவள்
தேன் என்பது தெரிந்த உண்மை...! 
அன்றும் இன்றும்  
எனக்காக ஒன்றும் இல்லை... இனி உனக்காகவே வாழ்வின் எல்லை...!





இது ஒரு அன்பின் தேடல்...!

நடந்தால் நடனமாடும் 

நாட்டியச் சிலை நீ...!
அசைந்தால் ஆடிடும் 

அழகிய தீ... நீ...!

உன் ரசனையின் ரசிகன் நான்...! அட
உன் ரசிகனும் நானேதான் ...!

உன்

அழகும் ஆடையும் என்னை மடக்கின...!
சிரிப்பும் முறைப்பும் என்னை நடத்தின...!

என்ன என்னவோ வரும்...
உன் மீது எனக்கு...!

பொறுமை வரும், பொறாமை வரும்...
கடமை வரும், கவிதை வரும்...

அடக்க முடியாத ஆசை வரும்
அடங்கி முடிகிற ஆர்வமும் வரும்...!
 

உன்னோடு  நானிருந்தால்
உலகமே  தேவையில்லை...!
இருக்கும் வரை... இறக்கும் வரை....!