சொக்கத் தங்கம் என்று...!
துள்ளியது மனது... அவள்
அல்லி மலரினும் அழகு என்று...!
கொன்றது அவள் பிரிவு... போனேன்
கொல்லி மலைச் சரிவு...!
சா என்றது மனது...
வா என்றது அவள் நினைவு...!
கொட்டியது மழைத் தூறல்... மீண்டும்
எட்டியது அவள் நினைவுச் சாரல்...!
ஏன் எனத் தெரியவில்லை... அவள்
தேன் என்பது தெரிந்த உண்மை...!
அன்றும் இன்றும்
எனக்காக ஒன்றும் இல்லை... இனி உனக்காகவே வாழ்வின் எல்லை...!
No comments:
Post a Comment