20110726

மந்திரச் சாவி...!

அன்பே...
என் காதல் கனிமொழி...!
துளி சிதறிய தேன்மொழி..!
 

உன் நினைவுசாரலில் நின்றேன் நின்றபடி...!
உன் அன்பில் அடங்கினேன் நீ சொன்னபடி...!
 

வாழ்க்கை சொற்பமானது...  ஆனாலும்
உன்னால் சொர்க்கமானது...!
 
அது என்ன என்று தெரியும்... ஆனாலும்
சொல்ல வசனமில்லை... வார்த்தையுமில்லை!
காதல் என்றும் சொல்லலாம்...ஆனால்
அதையும் தாண்டி இனிமையானது...!
 

இது மனதில் பூட்டிய மந்திரச் சாவி...!
சாவி தொலைந்த இடம்
எங்கோ ஓர் ஓரம்... ஆனால்
அது இளமை நிறைந்த சாரம்...!
 

போதும் என்றபோதும் பொங்கியது வெள்ளம்...
அதில் மூழ்கி முத்தெடுத்தது என் உள்ளம்...! 


20110706

மஞ்சகிழங்கே...!


உன் நேசம் போதும் வாழ்நாள் தோறும்...!
உன் பாசம் தீர்க்கும் தனிமை தாகம்...!

உன் வார்த்தை சொல்லும் ஆறுதல் மொழி
உன்  பார்வை சொல்லும் ஆயிரம் மொழி...!

முன்னாள் சொர்க்கம் விண்ணில் பறந்தது
உன்னால் சொர்க்கம் மண்ணில் தெரிந்தது...!

கடவுள் என்பது இயற்கையின் கூற்று...
காதல் என்பது கடவுளின் மாற்று...!

என் எழுத்தின் சாரம் நீளமாய்ப் போகும்
அதை நிறுத்தி நினைத்தால் அழகாய் மாறும்...!
  
 நிறுத்தி நினைக்கிறேன் நினைவில் உன்னை...!

மீண்டும் வருவேன்...

காதலோடும்... இனிய கவிதையோடும்...!





20110704

உன்னோடு என் உலகம்...!

உயிர்த்தெழுவேன் மீண்டும் நான்...
உயிர்த்தோழி உன்னாலே...!
நாளெல்லாம்  காத்திருப்பேன்...
நல்ல சொல்லை பார்த்திருப்பேன்...!

 
அழகு 
கண் கண்டு கலை எடுப்பேன்...!
அதையே சிலை வடிப்பேன்...!   
மீண்டும்  உன்னை சிறை பிடிப்பேன்...!


நினைத்தாலே
மழையும் தென்றலும்
மாறி மாறி வந்தது...! என்

நிலையும் நினைப்பும் 
நின்று கொன்று சென்றது ...!

 நீ இருப்பாய் என்னோடு
இதயம் இயங்கும் வரை...!

நானிருப்பேன் உன்னோடு இந்த
உலகம் உள்ள வரை...!