20110414

சினிமா விம‌ர்ச‌ன‌ம்






எந்திரன்: இன்டர்நேஷ‌னல் ம‌ல்லிப்பூவ‌ லோக்க‌லா காதுல சுத்துங‌கோ...ம்ம்ம் ந‌ன்னா ச்சுத்துங்கோ...! இப்போ புரிஞ்சுன்டேளா...!



 


காவ‌ல‌ன்: காத்திருந்தவ‌ன் பொண்டாட்டிய‌ நேத்து வ‌ந்த‌வ‌ன் கூட்டி போனானாம் - அப்ப‌டியே கொஞ‌ச‌ம்
உல்டா அடிச்சா அதான்பா க‌தை!



இளைஞன்: நீங‌க‌ அவர‌ச் சொல்றீங்க‌ளா...? இல்ல‌ அவ‌ரு உங்க‌ள‌ சொல்றாரா...? ப‌ண‌ம் ப‌த்தும் செய்யும்... ப‌தினொன்னாவ‌தா சினிமாவும் செய்யும்போல...! எப்ப‌டியோ விஜ‌ய் ஸார்... உங்க‌ளுக்கு மார்ட்டின் லாட்ட‌ரி அடிச்சுருச்சு...!  



ல‌த்திகா:எரியுர‌ நெருப்புல‌ ஏன் ஸார் எண்ண‌ய‌ ஊத்துறீங்க‌... ப்ளீஸ் உடுங்க‌ ஸார்... நாங்‌‌க‌ போஸ்டர் பார்த்தே சிரிச்சுட்டு போறோம்! 
(ப‌ண‌ம் ப‌தினொன்னாவ‌தா சினிமாவும் செய்யும்னு சொன்னேன்ல... இப்பவாவ‌து ந‌ம்புங்‌‌க...!)

விலைவாசி...!

 
அரிசி முப்ப‌து
ப‌ருப்பு அறுபது...!
ஏழையின் சிரிப்பில்
அழகிய‌ பூனைக்குட்டி...!




அவ‌ள் 
சிரிப்பில்
என் க‌ற்பு

க‌ரையானது...!


அவ‌ள்...!
 

கருப்பான‌ தேக‌ம்தான் ஆனாலும்
க‌னியாடும் கான‌க‌ம்...!
தேர் போன்ற ந‌டை... அதில்
தேன் த‌ட‌விய‌ இடை...!

இளமையாடும் வேகம்... அதனால்
இமைமூடும் மேகம் ... 
நீ கலையான சிலை...
எனினும்  விரிக்காதே வலை ..!



க‌ல்லை உறுமாற்றினால் அது சிலை!
சிலையை க‌லையாக்கினால்
அது நாத்திக‌ம்!
க‌லையை க‌ட‌வுள் ஆக்கினால்
அது ஆத்திக‌ம்!


விவ‌சாய‌ம்...!
அன்று
உணவுக்கான தொழில்
இன்று
அது ஒரு த‌ற்கொலை முய‌ற்சி...!






ம‌னிதனுக்கு ம‌ண்ணாசை...
ப‌றந்தான் நிலவுக்கும்...!

20110409

ஏ....கடலே...!

தாயேவென்று உன்னை வணங்கிணோமே...!
தண்ணீர் என்று நாங்கள் சுணங்கிணோமா?

என்ன கோபம் எங்கள் மீது...?
ஏன் இந்த சீற்றம் என் மக்கள் மீது...?

மாற்றம் வேண்டுமெனில் நீ மாற்றிக்கொள்...!
சீற்றம் வேண்டாம் எங்கள் மீது...!

சுறுசுறுப்பாய் இயங்கும் எஙகள் ஜப்பான் மீது
சுனாமி உமிழ்ந்து சுக்குணூறாக்கினாய்...!

எத்தனையோ யுத்தத்தினால்
யுத்த சத்தத்தினால் ரத்தம் கண்ட புத்த பூமியது!
 
நின்று நிதானித்து யோசித்தால்
நீ எங்களுக்கு கொடுத்ததெல்லாம் கோடிகோடிதான்...!
அதற்காக திடீரென்று எல்லாம் பறித்து
என் மக்களை நிறுத்தியதேன் தெருக்கோடியில்...?

இச்சையால் பச்சைக்கு நாங்கள் பங்கம் செய்தோம்
தெரிந்தும் தெரியாமலும் இயற்கை விதிகளை
கொஞ்சம் கொஞ்சமாக மீறினோம்
அதற்காக பூமியில் தஞ்சம் வந்த எங்களை
கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பது ஞாயமா?

எங்களுக்குள் சண்டை, சமாதானமாய் வாழ்ந்து போகிறோம்
இடையில் நீ வந்து
தண்ணீரால் தாயம் போடாதே...!

எங்களுக்குள் நாங்களே
கந்தகம் வீசீ குந்தகம் செய்கின்றோம்
மாற்றான் தோட்டத்தில் மாடு மேய்த்தும் மகிழ்கின்றோம்
அதற்காக நீ கூற்றானோடு கூட்டு வைத்து
எங்களுக்கு கூண்டோடு வேட்டு வைக்காதே...!

வாழ்விலும் சாவிலும் உன்னை
வணங்கித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...!

எங்கள் கண்ணீரால் உன் கைகளை கழுவ நினைக்காதே...!

எங்களுக்கு பூமிதான் சாமி... கடல்
எங்கள் பூமியின் சாமி...!

உன் சிரிப்பொலியில்...
வானம் கருவாகும்...
மழைவெள்ளம் தெருவாகும்...

வனமெல்லாம் வாசம் வீசீ
மனசெல்லாம் பாசம் தூவீ
என் வழ்க்கையே நிறம் மாறும்...!

வந்துவிடு என்னோடு
உன் மனமே என் கூடு...!