20110409

ஏ....கடலே...!

தாயேவென்று உன்னை வணங்கிணோமே...!
தண்ணீர் என்று நாங்கள் சுணங்கிணோமா?

என்ன கோபம் எங்கள் மீது...?
ஏன் இந்த சீற்றம் என் மக்கள் மீது...?

மாற்றம் வேண்டுமெனில் நீ மாற்றிக்கொள்...!
சீற்றம் வேண்டாம் எங்கள் மீது...!

சுறுசுறுப்பாய் இயங்கும் எஙகள் ஜப்பான் மீது
சுனாமி உமிழ்ந்து சுக்குணூறாக்கினாய்...!

எத்தனையோ யுத்தத்தினால்
யுத்த சத்தத்தினால் ரத்தம் கண்ட புத்த பூமியது!
 
நின்று நிதானித்து யோசித்தால்
நீ எங்களுக்கு கொடுத்ததெல்லாம் கோடிகோடிதான்...!
அதற்காக திடீரென்று எல்லாம் பறித்து
என் மக்களை நிறுத்தியதேன் தெருக்கோடியில்...?

இச்சையால் பச்சைக்கு நாங்கள் பங்கம் செய்தோம்
தெரிந்தும் தெரியாமலும் இயற்கை விதிகளை
கொஞ்சம் கொஞ்சமாக மீறினோம்
அதற்காக பூமியில் தஞ்சம் வந்த எங்களை
கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பது ஞாயமா?

எங்களுக்குள் சண்டை, சமாதானமாய் வாழ்ந்து போகிறோம்
இடையில் நீ வந்து
தண்ணீரால் தாயம் போடாதே...!

எங்களுக்குள் நாங்களே
கந்தகம் வீசீ குந்தகம் செய்கின்றோம்
மாற்றான் தோட்டத்தில் மாடு மேய்த்தும் மகிழ்கின்றோம்
அதற்காக நீ கூற்றானோடு கூட்டு வைத்து
எங்களுக்கு கூண்டோடு வேட்டு வைக்காதே...!

வாழ்விலும் சாவிலும் உன்னை
வணங்கித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...!

எங்கள் கண்ணீரால் உன் கைகளை கழுவ நினைக்காதே...!

எங்களுக்கு பூமிதான் சாமி... கடல்
எங்கள் பூமியின் சாமி...!

No comments:

Post a Comment